Monday, October 5, 2009

ஒரு டைரியின் கதை


இந்த பிளாகுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் ஒன்றும் நியாபகத்துக்கு வர வில்லை. சரி அப்படி என்ன காவியமா எழுத போறோம், எல்லாம் சொந்த கதை சோக கதை தானே. அதனால இதுக்கு "மை டைரி" ன்னு பெயர் வைச்சேன். ஆனா அந்த பெயரை ஏர்க்கனவே யாரோ புடிச்சி வச்சிருக்காங்க. அதனால என் டைரிக்கு என் பெயரையே வெச்சிட்டேன்.
அட, காதுல நல்லா கேக்குது, முகில்ஸ் டைரி ன்னு இங்கிலீஷல ஏன் பெயர் வெச்சேன்னு தானே கேக்கறீங்க. Actually I started to create this blog only in English, but accidentally my தமிழ் கீ போர்டு காட் அக்டிவேட்டேட். அண்ட் ஐ லாண்டேட் இயர் ரைடிங் டாமில், சாரி தமிழ்.

இது வரை டைப் செய்வதற்கு கிட்ட தட்ட முப்பது நிமிடத்துக்கு மேல எடுத்து கொண்டேன்.

அட்லீஸ்ட் தமிழ் நாட்டில பொறந்ததுக்காகவும்,
தமிழ்ல அழகா பெயர் வச்சிருக்கரதனாலேயும் (நீங்க சிரிக்கறது எனக்கு தெரியுது),
தமிழ்ல ஆங்கிலம் போலவே வேகமா டைப் செய்யும் ஆசைனாலையும்,
தமிழை நான் சீக்கிரம் மரக்க கூடாதுங்கரதனாலேயும் (நான் எழுதும் தமிழை படித்து மத்தவங்க தமிழ் மறந்தா அதுக்கு நான் பொருப்பு இல்லை)
இந்த பிளாகை தமிழ்லியே தொடரலாம்னு முடிவு பன்னிட்டேன்.



No comments:

Post a Comment