Saturday, October 17, 2009

சாகரன்

வலைப்பதிவில் குறைந்த பட்சம் மூன்று பதிவையாவது போட்டா தான் நம்ம சைட்டை தமிழ்மனத்தில் சேர்ப்பாங்கன்னு எங்கோ படித்த் நியாபகம்.
அதான் உடனே வந்துட்டேன்.

இந்ந பதிப்பில் நான் நியாபகப்படுத்த வேண்டியது எனது நண்பர் சாகரனை பற்றி. bloggerல் ரொம்ப காலமா உலா வரும் பலபேருக்கு சாகரனை நல்லா தெரியும். எனக்கு blog பத்தியும், unicode  பத்தியும், தமிழில் டைப் செய்றது பத்தியும் எனக்கு கத்துக் கொடுத்தது சாகரன் தான். அவரின் படைப்பான தேன்கூடு இணையம் ரெடியானதும் என்னை கூப்பிட்டு காண்பித்தார். சைட் முழுவதும் காட்டி சந்தோஷப்பட்டார். அப்போது கூட அவர் ஒரு technical ஆசாமியாக தான் எனக்கு தெரிந்தார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் தான், அவர் bloggerல் எவ்வளவு பிரபலம் என்று தெரிந்தது. ஆயிரக்கணக்கான் இணைய தளத்தில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டன. அவர் கடைசியாக நடித்த மேடை நாடகம் இன்னும் என் கண்ணில் நிர்க்கிறது.

ரொம்ப நாலைக்கு அப்புறம், வலைப்பூவுக்கு வந்ததும், அவர் நியாபகம் வந்தது, அதான்......

Friday, October 16, 2009

கருப்பு

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...

அட நான் பாட்டு பாடலீங்க.
எனக்கு புடிச்ச கலர் கருப்புன்னு சொன்னேன்.
நான் சோல்லவே வேனாம், இந்த blog கலர் பாத்தாலே உங்களுகே தெரியும்.
பை த பை, கருப்பு ஒரு கலரே கிடையாதுன்னு சில பேர் சொல்லலாம்.
As per physics, Black is not a colour, It is just the absense of light/colour.
இதை நானும் ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.
ஆனா என்ன பன்றது, கருப்பும் ஒரு கலர்ன்னு சொல்லியே பழகிருச்சி.

ஆனாலும் என் blog குக்கு கருப்பு போட வேர ஒரு காரணமும் இருக்கு.
நான் blog palette செலக்ட் பன்னும் போது,  blackle.com சைட் நியாபகம் வந்தது.
அதோட எபெக்ட் தான், சரி நம்பலும் கொஞ்சம் கரண்ட் மிச்சப்படுத்தலாம்னு தான்.....

Monday, October 5, 2009

ஒரு டைரியின் கதை


இந்த பிளாகுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தால் ஒன்றும் நியாபகத்துக்கு வர வில்லை. சரி அப்படி என்ன காவியமா எழுத போறோம், எல்லாம் சொந்த கதை சோக கதை தானே. அதனால இதுக்கு "மை டைரி" ன்னு பெயர் வைச்சேன். ஆனா அந்த பெயரை ஏர்க்கனவே யாரோ புடிச்சி வச்சிருக்காங்க. அதனால என் டைரிக்கு என் பெயரையே வெச்சிட்டேன்.
அட, காதுல நல்லா கேக்குது, முகில்ஸ் டைரி ன்னு இங்கிலீஷல ஏன் பெயர் வெச்சேன்னு தானே கேக்கறீங்க. Actually I started to create this blog only in English, but accidentally my தமிழ் கீ போர்டு காட் அக்டிவேட்டேட். அண்ட் ஐ லாண்டேட் இயர் ரைடிங் டாமில், சாரி தமிழ்.

இது வரை டைப் செய்வதற்கு கிட்ட தட்ட முப்பது நிமிடத்துக்கு மேல எடுத்து கொண்டேன்.

அட்லீஸ்ட் தமிழ் நாட்டில பொறந்ததுக்காகவும்,
தமிழ்ல அழகா பெயர் வச்சிருக்கரதனாலேயும் (நீங்க சிரிக்கறது எனக்கு தெரியுது),
தமிழ்ல ஆங்கிலம் போலவே வேகமா டைப் செய்யும் ஆசைனாலையும்,
தமிழை நான் சீக்கிரம் மரக்க கூடாதுங்கரதனாலேயும் (நான் எழுதும் தமிழை படித்து மத்தவங்க தமிழ் மறந்தா அதுக்கு நான் பொருப்பு இல்லை)
இந்த பிளாகை தமிழ்லியே தொடரலாம்னு முடிவு பன்னிட்டேன்.